புத்தாக்க விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் பிரசைகளின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துதல் என்பவற்றுக்காக காணியையும் நீரையும் உன்னதமாகப் பயன்படுத்தும் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த நிறுவனம்.
இலங்கை சமுதாயத்தின் செழிப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரங்களுக்காக புதுப்பிக்கத்தக்க சக்திப் பிறப்பாக்கம், மிகச் சிறந்த சுற்றாடல் மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை குறைநிரப்புச்செய்து மிக அண்மைக்கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புத்தாக்க விவசாய உற்பத்தித்திறனுக்காக காணியினதும் நீரினதும் பாவனையை வழிப்படுத்த நாம் பாடுபடுகின்றோம்.
இலங்கையின் உலர் வலயத்தில் மகாவலியின் பிரதான திட்டமானது மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட 13 வலயங்களில் விவசாய அபிவிருத்திக்காக 365,000 ஹெக்டெயர் காணியை ஒதுக்கியுள்ளது. புதிய குடியேற்றங்களைத் தாபிப்பதற்கும் விவசாய அபிவிருத்திக்கும் வசதியளிக்கும் பொருட்டு தொடரான நீர்த்தேக்கங்களையும் நீர்மின் நிலையங்களையும் நிர்மாணிப்பதற்கும் நீர்ப்பாசனத்துடன்கூடிய பாரிய நிலப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டது.மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துவதே பாராளுமன்றச் சட்டமொன்றினால் 1979 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாணை ஆகும். பிரதான திட்டத்தினால் பிரேரிக்கப்பட்ட எஞ்சிய பகுதிகளிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பகுதிகளிலும் எதிர்வுகூறப்பட்ட கருத்திட்டத்தை அமுல்படுத்துவதே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதய பணியாகும்.நீர்ப்பாசன வலையமைப்பை புனரமைத்தல் மற்றும் பராமரித்தல், காணியை நிர்வகித்தல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடியேற்றத்திற்குப் பின்னரான செய்முறை என்பவற்றை இது உள்ளடக்கும். மேலும், உலர் வலயத்தில் நீர்ப்பாசனம் செய்யக்கூடிய 101,526 ஹெக்டெயர் காணிக்கான நீர்ப்பாசன நீரை முகாமிப்பது இலங்கை மகாவலி அதிகாரசபையின் பொறுப்பாகும்.
மகாவலி சுற்றுலாத்துறை
திரு கே. டி. லால் காந்த அவர்கள்
விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
கௌரவ டாக்டர் சுசில் ரணசிங்க
விவசாய, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர்
திரு. டி.பி.விக்கிரமாதித்தன்
செயலாளர் - விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம்